Description
‘சீறாப்புராண பிரசங்கிகள்’ சிலர் இருந்து வந்துள்ளனர். அறியாப்பருவத்தில் அத்தகைய ஓரிருவரின் உரை நிகழ்ச்சியைக் கேட்ட அனுபவம் உண்டு. அண்மைக்காலத்தில் அந்த நற்பணியைச் செய்த பெருமை, கலைமாமணி கா. மு. ஷரீப் அவர்களுக்கு உண்டு. அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் ஆற்றி வந்த சீறாப்புராண விரிவுரை நிகழ்ச்சியும் குறிப்பிடத்தக்கது. முழுநேர ஈடுபாட்டின் மூலமே உரை, விளக்கங்களை நிறைவு செய்ய இயலும். ஆற்றலுக்கு மீறிய பணி என்பதால் ஆர்வ முள்ளவர்களும் பின்வாங்கக் கூடிய நிலைமை. கலைமாமணி கா. மு. ஷரீப் அவர்கள் சீறா உரை- விளக்கத் தொகுதிகளை வழங்க முற்பட்டது புது மலர்ச்சியைத் தோற்றுவித்தது. அவரைத் தொடர்ந்து டாக்டர் மு. அப்துல் கறீம் அவர்களும், ஹனீபா அப்துல் கறீம் அம்மையாரும் அந்த நற்பணியைத் தொடர்வது பெருமைக்குரியது; பெருமிதம் தருவது.
Reviews
There are no reviews yet.