Description
இஸ்லாத்தை உலகுக்கு போதித்து, உலல் பரவ அடிகோலிய முகமது நபி அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டுள்ளது சீறாப்புராணம். நபிகள் நாயகம் அவர்களது பிறப்பு, திருமணம், ஆற்றல், வெற்றி, உபதேசம் போன்றவை இதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. சீறத் என்ற அரபுச் சொல்லே சீரு என மருவியது. சீறத் என்றால் வரவாறு என்று பொருள். தூய வாழ்க்கை நடத்திய நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றைக் கூறுவது சீறாப் புராணம். விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்றத்துக் காண்டம் என்ற முப்பெரும் பிரிவுகளாக விரிகிறது இந்நூல். விலாதத் என்ற அரபுச் சொல், பிறப்பு என்று பொருள் தரும்.
Reviews
There are no reviews yet.