Description
இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாற்றில், சட்டம் பயின்று பட்டம் பெற்ற வழக்கறிஞர்கள் பலர், தமிழ் வித்தகராய் – தமிழ்த் துறைத் தலைவர்களாய் விளங்கித் தமிழ் வளர்த்த பெருமை குறிப்பிடத்தகுந்ததாகும். ஆங்கிலமும் தமிழும் வல்ல வழக்கறிஞர்கள் இலக்கியத் திறனாய்வுக் கலையில் வாதப்பிரதிவாதங்களை எழுப்பினர்; பலர் பெருமிதத்துடன் வாழ்ந்து தமிழுக்குச் சிறப்புப் பல செய்தனர். அத்தகைய சான்றோர்களில் ஒருவர் திருவாளர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள். பிள்ளை அவர்கள், பல நல்ல தவப்புதல்வர்களை ஈன்றெடுத்த திருநெல்வேலிச் சீமையில் பிறந்தவர்கள்.
Reviews
There are no reviews yet.