Description
சிலப்பதிகாரத்தோடு கொண்ட உறவே இந்நூலாக உருக்கொண்டது. சிலப்பதிகாரத்தின் அருமை அறியாப்பருவத்தே – பள்ளியில் சிறுவனாய்ப் பயின்ற நாளிலே- ஆன்ற புலமை வாய்ந்த பெரியவர் ஒருவர்,தம் பேசிடையே வெளிப்படுத்திய ‘சிலப்பதிகாரம்’ என்ற தொடர் மொழியிலும் அதில் நிரம்பிக் கிடக்கும் ஓசை நயத்திலும் என் உள்ளம் கட்டுண்டது. தோழி சுதமதியிடம் மாதவி கோவலனுற்ற கொடுந்துயர் கூறிய நாளில், அருகிருந்து கேட்ட மணிமேகலை போல் இக்காவியக் கதையைப் பிறரிடம் நான் கேட்ட பொழுதெல்லாம் கண்ணீர் விட்டிருக்கிறேன். பின்னர் தமிழ்ப் புலமைத் கேர்வின் பொருட்டு நான் பூயின்ற நாளில் இக்காவியத்தை படிக்கும் வாய்ப்பு 1939-ம் ஆண்டு எனக்கு ஏற்படது. அது முதல் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத தின்’ இயல்பைப் பலவாறு உணர்ந்து வருகிறேன்.
Reviews
There are no reviews yet.