Description
இந்திய சோவியத் நட்புறவை முதன் முதலாக வரவேற்றுப் பாராட்டி எழுதப்பட்ட கூட்டுக் கவிக்குரல் இது. நமது இரு தேசங்களின் நல்லுறவு சர்வதேச சரித்திர ரீதியாகவும் முக்கியத்துவம் ரீதியாகவும் வாய்ந்தது. ஆன்மீகச் செழுமை மிக்க ஒரு நாடும், உழைப்பின் பெருமை மிக்க ஒரு நாடும் கைகோத்து உலக அரங்கில் பவனி வரும் கம்பீர வேளையில், மன மார அதனை வரவேற்கும் சிநேக புஷ்பங்களின் வாசனைத் தோட்டம் இது. ரத்தினங்களின் ஒளித் தெறிப்பாய் இந்தக் கவிதைகள் நட்பின் உன்னதத்தைக் காணிக்கை வைக்கின்றன. அரசியல் பொருளாதார இலக்கிய ரீதியாக இந்தியாவும் ரஷ்யாவும் கொடுத்த கொடைகள் பல.
Reviews
There are no reviews yet.