Skip to content Skip to footer

சத்யாக்ரகி

ஒவ்வொரு நாளும் பிறக்கப்பிறக்க நாம் காந்தி நாட்களிலிருந்து தள்ளித்தள்ளிப் போய்க்கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன். நான் காந்தி நாட்களை- 1920.48 காலத்தை- பார்த்தவன், உணர்ந்தவன், கொஞ்சம் ஈடுபட்டவனும்கூட, ஆகவே ஒரு படைப்பாளியாக நான் உருவாகி வளர்ந்து வரும் போது என் கதைகளுக்கான விஷயங்களை எடுத்துக்கொள்கையில் அவ்வப்போது அந்த நாளய காந்தீய நிகழ்ச்சிகளும் சிந்தனைகளும் போக்கும் என்னை பாதித்த அளவுக்கு என் உணர்விலே உறைத்த அளவுக்கு என் சில சிறுகதைகளுக்கான விஷயங்களாக அமைந்தன.

Additional information

Author

சி.சு.செல்லப்பா

Accession No

46581

Language

Tamil

Number Of Pages

154

Title_transliteration

Catyākraki

Publisher

எழுத்து பிரசுரம்

Publishing Year

1964

Categories: , Tags: , Product ID: 26258

Description

இந்த விஷயங்களிலிருந்து கதைக்கருக்கள் பிறந்தன. என் கற்பனா சக்தியும் வெளியீட்டு சக்தியும் கலைத்திறனும் உதவி அவை சிறுகதைகளாக வடிவம் பெற்றன. அந்த சிறுகதைகள் பன்னிரெண்டு – இருபத்தைந்து ஆண்டுக் காலத்தில் எழுதப்பட்டவை – கொண்ட தொகுதி இது. ‘வந்தே மாதரம்’ மில் ஆரம்பித்து ‘சத்யாக்ரகி’யில் முடிகிற இவை காந்தி கால ஏடுகள். எனக்கு எப்போதுமே ஒரு ஆசை. சென்று போனதை நினைத்துப் பார்க்கவேண்டும், இந்த நினைப்பிலே அந்த நாட்களுக்கே போய்விடவேண்டும், இந்த இரண்டுக்கும் மேலாக நமக்கு முன் வெகு சமீபத்தில் முத்திரை பதித்துச் சென்றிருக்கும் சமீபத்திய மரபு மறந்து போயேவிடாமல் இருக்க, இருந்த சுவடே தெரியாதுபோய்விடாமல் இருக்க, அது இன்னும் நம் கண்முன் அழியாத சித்திரமாக நிற்கச் செய்ய, முடிவாக நமது பிதுரார்ஜிதம் நமக்கு கிடைக்கும்படியாகச் செய்யவேண்டும் என்பதுதான் அது.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “சத்யாக்ரகி”

Your email address will not be published. Required fields are marked *