Description
சங்கநூல்கள் முகமாகத் தெரியக்கூடிய சில விஷயங்களைப் பற்றிப் பத்து உபந்யாசங்கள் செய்யவேண்டுமென்று சென்னை ஸர்வகலா சங்கத்தார் 1926-ஆம் வருஷத்தில் எனக்குத் தெரிவித்தார்கள். தேக அஸௌக்யம் முதலிய காரணங்களால் அதனை ஏற்றுக்கொள்ள எனக்கு அப்போது தைரியம் உண்டாகவில்லை ; ஆனால் அவர்கள் பேரன்புடன் வற்புறுத்தினமையால் மறுத்தற்கு அஞ்சித் தெரிந்த சில விஷயங்களைச் சொல்ல ஒப்புக்கொண்டேன். உபந்யசிக்கப்படும்போது உபந்யாசங்கள் பின்பு புத்தக ரூபமாக வெளி வருமென்பது எனக்குத் தெரியாது. அவை முடிந்த பின்புதான் அஃது எனக்குத் தெரியவந்தது. பத்தும் 7-11-1927 முதல் 21-12-1927 வரையில் பத்துத்தினங்களிற் செய்யப்பட்டன.
Reviews
There are no reviews yet.