Description
எழுதிக்கொண்டே போனதை இடையில் மறந்துவிட்டுப்பின்பு தொடர்ந்தெழுதுவ தென்பது முடியாத செய்தி என்பதை நான் இதிற்றான் கண்டேன்,என் இளங்கவிஞர்கட்கு நான் இதைக் கூறி வைத்தேன்.எழுதிவிட்டமுக்காற் பகுதியை நூறு முறை படித்தும், விட்ட இடத்திலிருந்து- ஓட்டம் குறையாமல்- சுவை மட்டுப்படாமல் தொடர் முடியவேயில்லை. இத்தனைக்கும் இந்நூலைப் பெரிதும் உவமை சிறக்க எழுதிவரவுமில்லை. ஒருவாறு நூலை முடித்தேன்; பாரி நிலையத்திற் கொடுத்தேன்.விரைவில் வெளியிட்டமைக்கு நிலைய முடையார்க்கு என் நன்றியுரியது.பிழை இருக்கலாம், அழகு குறையலாம் – ஆதரவு தரத் தமிழர்களை பொறுத்து வேண்டுகின்றேன்.
Reviews
There are no reviews yet.