Description
1968-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு கருத்தரங்கினை ஓட்டித் தமிழக அரசு மதுரைப் பல்கலைக் கழகத்தில் நிறுவிய அறக்கட்டளையால் தோற்றம் பெற்ற திருக்குறள் ஆய்வுத்துறைக்குத் திருக்குறளின் வாழ்வியற் கருத்துக்கள் ஆராய்ச்சிப் பொருளாக ஒதுக்கப்பட்டன. மக்கள் குடும்பமாகவும் சமூகமாகவும் அரசின் குடிகளாகவும் இயற்கையின் படைப்பாகவும் வாழுகின்றனர். இவ்வனைத் தியல்புகளையுமே வாழ்வியல் எனல் வேண்டும். ஆகவே வள்ளுவர் கூறும் இல்வாழ்வியல், சமூகவியல், அரசியல், பொருளியல், ஒழுக்கவியல், சமயவியல் கருத்துக்களே திருக்குறளின் வாழ்வியற் கருத்துக்கள் ஆகும். மதுரைப் பல்கலைக் கழகத்துத் திருக்குறள் ஆய்வுத் துறையில் இவைபற்றி முறைப்படி ஆராய்ச்சி நடைபெறும். முதன் முதலாக வள்ளுவர் வழங்கிய பொருளியல் ( Economic Ideas of Tiruvalluvar) ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.’ அது குறள் கண்ட பொருள் வாழ்வு என்னும் பெயர் தாங்கி நூலாக வெளிவந்துள்ளது.
Reviews
There are no reviews yet.