Description
அமுதகாபியைப் பெற்றுக் கையில் ஏந்தி நாடெங்கும் சென்று மக்களின் பசிப்பிணியைத் தீர்த்துத் தொண்டு செய்த அறச் செல்வி. பல சமயங்களின் கொள்கைகளையெல்லாம்
ஆராய்ந்தறிந்து, பௌத்த சமயத்தில் நின்று பற்றற்ற அருள் வாழ்க்கை நடத்திய தலைவி அத்தகைய தமிழ்ப் பெண்மணியின் வரலாற்றைக் காவியமாக்கிய சீத்தலைச் சாத்தனார், தம் காவியத்தில் இடையிடையே பல இடங் கணில் திருக்குறளின் கருத்துக்களையும் தொடர்களையும் சொற்களையும் எடுத்தாண்டிருக்கிறார். ஒரு மொழியில் புதிய நூல் ஒன்றை எழுது கின்றவர், தம்மை அறியாமலே பழைய நூல்களின் கருத்துக்களைப் பயன்படுத்திக்கொள்வது அவர் கற்ற நூல்களின் சொற்றொடர்களும் சொற் களும் அவருடைய நினைவில் ஊறிக்கிடப்பதால், ஏதே னும் எழுதும்போது அவை அங்கங்கே அப்படி அப் படியே வந்து நின்று அவருடைய எழுத்தில் வடிந்து விடும். கருத்துக்களும் சொற்களும் பிரிக்கமுடியாதவை. சொற்கள் இல்லையானாஸ் கருத்துக்கள் இல்லை.
Reviews
There are no reviews yet.