Description
ஏகத்துவம் என்ற மந்திர சக்தியால் உலக மக்களனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமைக்குரியது இஸ்லாமிய இனிய மார்க்கம். ஆதமின் மக்கள் யாவரும் ஒரு தாய் மக்களே என புரியவைத்து சகோதரத்துவத்தை வளர்த்தது, சகோதரர் என்ற சொல் பாசத்தையும், நேசத்தையும் ஏற்படுத்தும் கருச்சொல்லாக அமைந்துவிட்டது. ஒவ்வொரு சகோதரரும் அடுத்த சகோதரருடன் நட்புறவோடு பழக முற்பட்டால் அதுவே ஒற்றுமை எனும் பற்றுக்கோலை பற்றி முன்னேறிச் செல்லும் சாதனமாகி விடுகிறது. சாந்தியையும், சமாதானத்தையும் தோற்றுவிக்கும் சீர் சிந்தனையாளர்களை உருவாக்கி விடுகிறது.
Reviews
There are no reviews yet.