Description
அதனைக் கேட்டபோது, தமிழ்மொழிச் சரித்திர ஆராய்ச்சியில் கருத்தைச் செலுத்திநின்ற எனக்குப் புதிய தோர் ஊக்கம் உண்டாயிற்று. கிறித்துவ சமயத்தவரால் தமிழ்மொழி அடைந்த நன்மைகளைக் கூறும் தமிழ்நூல் இதுகாறும் இல்லாமையால், முதலில் இதனை எழுதுவது தான் நலம் எனக் கருதி, இத்துறையில் என் கருத்தைச் செலுத்தி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினேன். இதனிடை யில் ககூகூடு ஆம் ஆண்டின் கடைசியில், இலங்கை திருமிகு. விபுலாநந்த சுவாமிகள், B.Sc., (London), சென்னைக்கு வந்திருந்தபொழுது. அவர்களிடம் எனது ஆராய்ச்சியைத் தெரிவித்தேன். சுவாமிகள் இஃது அவசியம் எழுதவேண்டிய பகுதிதான் என்று தெரிவித்து, இவ் வாராய்ச்சி சம்பந்தமாகத் தங்கள் கருத்துக்களையும் தெரிவித்து என்னை ஊக்கப்படுத்தினார்கள். இதுவே இப்புத்த கம் எழுதப்பட்டதன் வரலாறு. இந்நூலிலுள்ள குற்றங் களை நீக்கிக் குணங்களையே கொள்ளும்படி பெரியோரை வேண்டுகின்றேன்.
Reviews
There are no reviews yet.