Description
கிராம வளர்ச்சித் திட்டங்களும் சமூக நலத்திட்டங்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகையால், கிராமப் புனரமைப்பைப்பற்றி மகாத்மா காந்தி கொண்டிருந்த கருத்துக்களைச் சுருக்கமாகத் திரட்டித் தருவது நலம் என்று கருதுகிறோம். காந்திஜி தம்மை ஒரு கிராம வாசியாகவே கருதினார். ஒரு கிராமத்திலேயே குடியேறினார். கிராமங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப்பல ஸ்தாபனங்களைத் தோற்றுவித்தார். கிராம மக்களின் உடல் நலத்தையும் பொருளாதார, சமூக நிலைகளையும் தார்மீக ஒழுக்கத்தையும் உயர்த்த முயற்சி செய்தார். இவை எல்லோரும் அறிந்தவை. கிராமங்களில் என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக்கூடாது என்பவைகளை அவர் மிகவும் தெளிவாகத் தெரிந்திருந்தார். அவர் மேல் நாட்டில் கல்வி கற்றவராய் இருந்த போதிலும் இந்த காட்டிலே, கிராமங்களுக்கும் படித்தவர்களுக்குமிடையே உள்ள பெரிய இடைவெளியை தீக்கித் தொடர்பு ஏற்படுத்த அவரால் முடிந்தது.
Reviews
There are no reviews yet.