Description
1933-க்கும் 1965-க்கும் இடைப்பட்ட 35 வருடங்கள் உடுமலை முன்னாள் ஜில்லா போர்டு (இந்நாள் அரசினர் உயர்நிலைப்பள்ளி ) உயர்நிலைப்பள்ளி, மற்றும் விசாலாட்சி மகளிர் உயர்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவ மாணவியர் அனைவரும் ‘தமிழ்ப் பண்டிதர்’ என்ற சொற்களை உச்சரிக்கும்போது காட்டும் மரியாதையை, அக்காலத்தில் அப்பள்ளிகளில் பயின்றுகொண்டிருந்தவர் தாம் உணர்வார்கள். இவர் தமிழ் கற்பிப்பதில் மட்டும் மனநிறைவு அடையாமல், ஒழுக்கத்தையும். கட்டுப்பாட்டையும் பேணிக் காப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார். கல்வித் துறையில் மிகுந்த கண்டிப்பூட்டுபவர்போல் தோன்றினாலும், அன்புள்ளத்தோடு மாணவர்களுக்கு வழி காட்டினார். தமிழாசிரியராக இருந்தாலும், தலைமை ஆசிரியருக்கு இணையான மரியாதையை மாணவ மாணவியர் இவர்பால் காட்டினர் என்றால் மிகையாகாது.
Reviews
There are no reviews yet.