Description
கிழக்குப் புத்தக சபையின் தலைவரான F. X, C. நடராசா அவர்களும், நிதி நிருவாகியான ஆ.சண்முகநாதன் அவர்களும், செயலாளரான ஆர். பாலகிருஷ்ணன் அவர்களும் இத்தொகுப்பு வேலையைத் துரிதமாக்கும்படி உற்சாகப்படுத்தியமைக்கு நான்
கடப்பாடுடையவனாவேன். தன்னுடைய மெய் வருத்தம் பாராது, மழை – வெயில் பாராது. இரவு – பகலென்றும் பாராது, ‘என் வவது கை”யாக ஒருவர் ஒத்துழைப்பு நல்கியிருக்காதுபோனால், இத்தொருப்பு அலுவலை என்னாற் பூரணப்படுத்தியிருக்க முடியாது. அந்த ஒரு வர்தான் ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும், இலக்கிய இரசி கரும் – விமர்சகரும், நடமாடும் வாசிச்சாலையுமான இரசிகமணி கனக. செந்திநாதன் அவர்களாவர். இத்தொகுப்பு வேலை சம்பந்தமாக அவர் நல்கிய ஆலோசனைகள், தந்த ஊக்கம், செய்த உதவிகள் அளப்பரியன.
Reviews
There are no reviews yet.