Description
தமிழில் விளங்கும் சிற்றிலக்கிய வகைகளுள் கோவை என்பதும் ஒன்று. அஃதாவது உருவும் திருவும் பருவமுங்குலனும் அன்பும் முதலியவற்றால் தம்முள் ஒப்புடையராகிய தலை மகனுந்தலைமகளும் பிறர் கொடுப்பவும் அடுப்பவும் அன்றிப் பால் வகையால் தாமே எதிர்ப்பட்டுக் ‘களவிற் புணர்ந்து இன்பந்துய்த்துப் பின் கற்பு நிலையின் கிழமை பூண்டு, விருந்து புறந்தந்து அருந்தவர்ப் பேணி ஒழுகிவரும் இல்லற இயற்கை நுட்பத்தைப் புனைந்துரை வகையால் எடுத்துரைத்து ஒரு கோவையாக்கிக்கற் போர்க்கும் கேட்வோர்க்கும இன்பம் பயக்கும் துள்ளலோசையான் அமைந்த கட்டளைக் கலித்துறைப் பாக்களால் பாடப் பெறுவதாகும்.
Reviews
There are no reviews yet.