Description
நம் காலத்தின் பல்வேறு சோஷலிசப் போதனைகளில் விஞ்ஞான ரீதியில் மெய்யான ஒரே தத்துவம் சோஷலிசம், கம்யூனிசத்தைப் பற்றிய மார்க்சியலெனியத் தத்துவமாகும். இப்புத்தகத்தின் ஆசிரியர் இத்தத் துவத்தின் அடிப்படையில் “கம்யூனிசம் என்றால் என்ன’ என்னும் கேள்விக்கு பதிலளிக்கிறார். விஞ்ஞான கம்யூனிசம் சூனியத்திலிருந்து தோன்றி விடவில்லை. கற்பனாவாத சோஷலிசமும் கம்யூனிசமும் (அதாவது விஞ்ஞான ரீதியாக இல்லாத மற்றும் பல வழிகளில் விசித்திரமான சோஷலிச மற்றும் கம்யூனிசக் கருத்துகள்) வளர்ச்சியடைந்த ஒரு காலகட்டம் அதற்கு முன் இருந்தது, இது ஒரு சில நூற்றாண்டுகளுக்கு நீடித்தது; அதைச் சேர்ந்த மாபெரும் சிந்தனையாளர்கள் பல்வேறு கம்யூனிச, சோஷலிசத் தத்துவங்களை உருவரையாகக் கூறினார்கள்.
Reviews
There are no reviews yet.