Description
கம்பர் தந்துள்ள இராமாயணக் காப்பியம் ஏழு கடலும் இணைந்த பெருங்கடல் போன்றதாகும். அந்த மாக்கடலில் மூழ்கித் திளைப்போர் தனி இன்பம் துய்ப்பது இயற்கை: அரசியல் சூழலில் சிக்கி, காலத்தை என் வசம் கொள்ளாமல், காலத்தின் வசப்பட்டு அலையும் யானும் கம்பர் படைத்த காப்பியக் கடலினுள் அவ்வப்போது மூழ்கி இன்புறுவ துண்டு. அப்படியான் அனுபவித்த இன்பங்களை, பிறரும் அனுபவிக்கும் பொருட்டாக, அவ்வப்போது ‘செங்கோல்’ வார இதழில் கட்டுரைகளாக வரைந்து வரலானேன்: அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் .
Reviews
There are no reviews yet.