Description
இவருடைய காலத்தில் தமிழ் நாட்டில் கனமார்க்கத்தைச் சிறிதளவு பயின்றவர்கள் கூட மிகச் சிலரே இருந்தார்கள். இளமையிலிருந்து தொடர்ந்து சாதகம் பண்ணிவருபவர்களுக்கே அது கைகூடிவரும். அவ்வழியில் தனிமுயற்சியை மேற் கொண்டு எண்ணியதை எண்ணியபடியே எய்திய மனத்திண்மையை உடையவர் கனம் கிருஷ்ணையரா வர். இவர் இருந்தகாலம் ஏறக் குறைய நூறு வருஷங்களுக்கு முன்னதாகும். கிருஷ்ணையர் திருச்சிராப்பள்ளி ஜில்லா உடைய யார்பாளையம் தாலூகாவில் உள்ளதாகிய திருக் குன்றமென்னும் ஊரிலே பிறந்தவர்;
Reviews
There are no reviews yet.