Description
கட்டுரையில் கருத்துப் போலவே நடைத் திறமும். வெற்றுக் கருத்துத் தொகுப்பு அள்ளித் தெளித்த அலங்கோலமாய் இருக்கும். வீட்டுக்கு வருவாரை உள்ளம் பிணித்து வரவேற்கும் அழகுக் கோலம் இல்லத்தரசியின் கைவண்ணம் காட்டுவது போலக் கட்டுரை எழுதுவோன் கைவண்ணம் கட்டுரையில் காட்சிதர வேண்டும். உடம்பில்லா உயிர் போன்று நடைத்திறம் பெறாக் கட்டுரைக் கருத்துக்கள் பயன்தரா. கழுத்தும் வேண்டும்; முத்து மாலையும் வேண்டும். அது போலக் கட்டுரை சிறக்கக் கருத்தும் வேண்டும்; அதனை விளக்கும் நடைத்திறமும் வேண்டும்.
Reviews
There are no reviews yet.