Description
தமிழன் தன் நிலை மறக்கவில்லை; தன் நிலை கெடவுமில்லை; விரைவாக முன்னேறும் இவ்வுலகில் அவனும் கூடிய வரை முயன்று முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறான். தமிழ் மண்ணில் மட்டுமன்றி, வேறு எவ்விடத்தில் அவன் வாழ்ந்தாலும், அங்கெல்லாம் அவன் அன்னைத் தமிழைப் போற்றி வருகின்றான். அதன் வழி அவன் நிலையும் வாழ்வும் உயர்கின்றன. தானும் உயர்ந்து மற்றவரையும் உயரவிட்டு வாழச் செய்யும் நல்ல பண்பாடு தமிழனுடையது. அத்தகைய செய்மை நெறியினின்றும் சிறிதும் தவறாதவனாய்த் தமிழன் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே,’ என்ற மெய்ந்நெறியில் அன்னைத் தமிழுக்கு அரும்பணி செய்து அம்மொழியை உலக அரங்கேற்றி அனைவரும் போற்றும் வகையில் ஆக்கப்பணி புரிகின்றான்.
Reviews
There are no reviews yet.