Description
அது மட்டுமா வெளி நாட்டார் வருகையால் நம் நாடு பல வகையிலும் ஒரேயடியாகப் புரண்டு புதிய போக்கில் மாறி, புதுப் புது தோற்றங்களை ஏற்றுக்கொண்டது. அந்த மாறுதல் நம் மொழியிலும் ஏற்பட்டது. வீரமா முனிவர் சில தமிழ் எழுத்துகளை அன்றைய வசதிக் கேற்ப மாற்றினார். அதையே இன்று நாம் பயின்று வருகின்றோம். எழுத்துகள் இன்று தொல்காப்பியர் எழுதிய தமிழ் எழுத்துகள் யாருக்காவது தெரியுமா திருவள்ளுவர் எழுதிய தமிழ் இன்று எங்கே நத்திக் கலம்பகம் எந்த எழுத்தில் எழுதப்பட்டது 1000 ஆண்டுகட்கு முற்பட்ட பேரரசர்களாம் இராசராசன், இராசேந்திர சோழன் ஆகியோர் எழுதிவைத்த செப்பேடுகளில் உள்ள தமிழ் எழுத்துகளை இன்று நாம் படிக்க முடியவில்லை பார்த்துப் புரியாமல் விழிக்கிறோம்.
Reviews
There are no reviews yet.