Description
‘எனது நாடக வாழ்க்கை’ என்ற தலைப்பில் முத் தமிழ்க்கலா வித்துவரத்தினம், ஒளவை திரு டி. கே. ஷண்முகம் எம். எல். சி. அவர்கள், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாடகத் துறையில் தமக்கு ஏற்பட்ட அனுபவக் கனிகளைப் பிழிந்தெடுத்து, அந்த நறுஞ்சாற்றினை நாமனைவரும் பருகிடுமாறு அரிய தோர் நூல் வடிவில் தமிழ் மக்களுக்கு இன்று வழங்கியுள்ளார்கள். மணிவிழா எடுத்திருக்கும் இந்த இனிய மகிழ்ச்சிகரமான நாளிலே நாடகத் துறையில் தொல்காப்பியர் எனத் எல்லாவிதமான ஆற்றல்களும் நிரம்பிடப் பெற்ற அன்னார், எளிய சுவையான நடையிலும், கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தும், இக்கால இளைஞர்களின் சிந்தனைக்கு விருந்தாகவும், கருத்துத் தெளிவுக்கு மருந்தாகவும் இதனைப் படைத்துள்ளார்கள்.
Reviews
There are no reviews yet.