Description
எனது தமிழ் வாழ்க்கை 1973 மே 12, 13-ம் நாட்களில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் நடைபெற்றுள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் பங்கு பெற்றுவிட்டு ஊருக்குப் புறப்பட ஆயத்தமாகிறபோது, என்போன்று மாநாட்டிற்கு வந்திருந்த வெளியூர் அன்பர் சிலர் என்னை அணுகினார்கள். அவர்களுடன் பலப்பல நிகழ்ச்சிகளையும் கருத்துக்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் ஓர் அன்பர் என்னிடம் ” நீங்கள் ஏதேனும் வாழ்க்கைக் குறிப்பு எழுதி வைத்திருக் கின்றீர்களா?” என்று கேட்டனர்.
Reviews
There are no reviews yet.