Description
எனது மதிப்புக்குரிய சகோதரர் மௌலவி யூசுப் அன்ஸாரி அவர்களால் தூய தமிழில் இயற்றப் பெற்ற “எண்ணக் குவியல்” என்ற நூலை பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றேன். இந்நூல் உலகப் புகழ் வாய்ந்த இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்களின் சரித்திரப் பிரசித்தி பெற்ற ‘இஹ்யாவு உலூமுத்தீன்’ என்ற மாபெரும் அறிவுச் சுரங்கத்தின் ஒரு சிறு பகுதியேயாகும். இத்துணை பெரிய அறிவுக்கருவூலமான இஹ்யாவு உலு முத்தீனை தமிழில் பூரணமாக மொழி பெயர்க்கப் படாதது தமிழ் நாட்டிற்கே மிகப்பெரிய நஷ்டமாகும். ஆங்காங்கே சிலர் இதற்காக பெரு முயற்சி செய்து வருவது மனதிற்கு மகிழ்வூட்டுகிறது.
Reviews
There are no reviews yet.