Description
ஹஸ்ரத் உஸ்மான் பின் இஸ்லாமியக் குடியரசின் மூன்றாம் கலீபா. பரந்து விரிந்த பெரிய அரசின் தலைவர். வளமும் நலமும் சேர்ந்த நல்லரசின் தலைவர். ஒரு நாள் பிழை செய்த வேலையாளைத் தண்டிக்கும் பொருட்டு அவனது காதைப் பிடித்து அவர் திருகினார். வலி பொறுக்காத அந்த வேலையாள், ‘ஆ’ என்றலறினான், பெருமூச் செறிந்தான். அவனது ஒலியும் பெருமூச்சும் கலீபாவின் இதயமலரைத் தாக்கிவிட்டன. வேலையாளின் வேதனை அறிந்து நெஞ்சம் துடித்தார். வேதனை கொடுத்த தமக்குத் தண்டனை வேண்டும் என்று கருதினார். பணியாளை விளித்து, “உனக்குத் தீங்கு செய்துவிட்டேன். ஆதலின், அதற்குப் பதிலாக எனக்குத் தண்டனை வேண்டும்.
Reviews
There are no reviews yet.