Description
‘உழைப்பால் உயர்ந்த உத்தமரி’ எனும் அரிய நூலைப் படித்தேன். வாழ்வாங்கு வாழ்ந்த வள்ளல் மாயின் அபூபக்கர் ஹாஜியார் அவர்களைக் கண்டு மகிழும் உணர்வு பெற்றேன். ஆம், கவிதை நடையில் அமைந்துள்ள இந்நூலில் கவிதையின் கருப்பொருளாகிய சான்றோரைக் கண்டு களித்தேன். உழைத்து வாழ்வதே உயர்வு எனும் நாயக மொழிப் பொருளைப் பொன்னே போல் போற்றியவர். திரைகடல் ஓடித் திரவியம் தேடிய சீமான். வணிக மன்னர், தொழில் அதிபர், வாரி வழங்கிய வள்ளல், இஸ்லாமிய நெறி முறைகளைப் போற்றி வாழ்ந்த ஒழுக்க சீலர் மாயின் அபூபக்கர் ஹாஜியார் அவர்களோடு பழகியவன்; அவர்களின் அருங்குணங்களையும், இனிய செயல்களையும் அறிந்தவன்.
Reviews
There are no reviews yet.