Description
முதலாவது ஆசிய விளையாட்டுகள் 1951-ல் பாரதத்தில் ஆடப்பட்டபோது பாரதம் மறுபடியும் சமகால ஆட்டப் படத்தில் இடம்பெற்றது; இது பாரதத்தின் பூகோள ரீதியான பரிமாணங்கள் காரணமாக மட்டுமல்லாமல் வெகுநாட்களுக்குப் பிறகு அந்நிய ஆட்சியின் தளையிலிருந்து விடுபட்ட மானிட சமுதாயத்தின் சின்னமாக விளங்குவதாலுந்தான். ‘விளையாட்டை விளையாட்டு ஊக்கத்துடன் ஆடுக என்று காலஞ்சென்ற நமது பிரதமர், பண்டித ஜவா ஹர்லால் நேரு கூறி இப்பேரார்வங்களை பொருத்தமாக எடுத்துரைத்தார். இச்சொற்கள் வெறும் முழக்கம் மட்டுமேயல்லாது முன்னேற்ற பீடுநடை போடும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிடையே உண்மையான வாழ்க்கை ஆட்டத்தின்பால் நாம் கொண்டிருக்கும் அணுகலையும் வெளிப்படுத்தின.
Reviews
There are no reviews yet.