Description
சென்னையில் பஸ் பிரயாணம் இல்லாமல் எதுவும் நடக்காது. ஆனால் அதிலும் ஒரு வாய்ப்பு. அந்தப் பிரயாணத்தில் படிக்க வாய்ப்பில்லை என்றாலும் எதையாவது சிந்திக்கலாம். அதனால் அந்த நேரத்தை எப்படிப் பயனுள்ளதாகப் போக்குவது என்று யோசித்தபோது, கவிதை எழுதுவதைத் தவிர வேறுவழியில்லை என்று முடிவுக்கு வந்தேன். கவிதை எழுதும் பழக்கதோஷம் மீண்டும் பற்றிக்கொண்டது. பஸ்ஸில் கூட்டத்தில் பிரயாணம் செய்யும்போது, மனதிற்குள் கவிதையை உருப்போட்டு வைத்து, பிறகு எழுதி நோட்டில் எழுதி வைப்பேன். இதற்கு வெண்பாமிகவும் வசதியாக இருந்தது. கொஞ்ச நாளில் ஒரு பழைய சைக்கிள் வாங்கும் அளவுக்கு வசதி வந்துவிட்டது. பஸ்ஸில் யோசிப்பதைவிட சைக்கிளில் போகும் போது யோசிப்பது இன்னும் சற்று அனுகூலமாய் இருந்தது. இப்படியே எழுதியதில் நிறைய வெண்பாக்கள் சேர்ந்து விட்டன. ‘வளமான வாழ்விற்கு வழிகாட்டி’ என்ற தலைப்பில் வெண்பா கவிதையுடன் விளக்கவுரையும் சேர்த்து வெளியிட்டதில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
Reviews
There are no reviews yet.