Description
1840-ஆம் வருடம் ,கோடைகாலம் அப்பொழுது சானினுக்கு வயது இருபத்திரண்டு முடிந்து, இருபத்து மூன்று நடந்து கொண்டிருந்தது. இத்தாலியிலிருந்து ரஷ்யாவுக்குக் கிளம்பினவன் வழியில் பிராங் போர்ட்டில் தங்கினான். அன்று வானம் நிர்மலமாய், ஒளிமயமாய் விளங்கிற்று. புகழ்பெற்ற ஹோட்டல் ஒன்றில் உணவு அருந்திவிட்டு, ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று வெளியே கிளம்பினான், உல்லாசப் பிரயாணிகள் பார்ப்பதற்கு என்றுள்ள முக்கியமான இடங்களில் சிலவற்றைப் பார்த்தான். ஓரிடத்திலும் அவனுக்குச் சுவாரஸ்யம் தட்டவில்லை. கடைசியில் மாலை மணி ஆறு அடிக்கும் போது, சோர்ந்து, தளர்ந்து, தங்கியிருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தான்.
Reviews
There are no reviews yet.