Description
சாதாரண எழுதப் படிக்கத் தெரியாதவர்களோடு மாத்திரமின்றி, படித்துப் பட்டம் பெற்று வெளி வரும் சர்வகலாசாலை மாணவர்கள் கூட இதே நிலையில் தான் இருக்கின்றனர். முஸ்லிம் பட்டதாரிகள், பிற சமய நூற்களான இராமாயணம், மகாபாரதம், பைபிள் போன்றனவற்றை நன்கறிந்திருக்கின்றனரே அன்றி இஸ்லாமிய நூற்கள் பற்றி அணுவளவும் அறிந்தவர்களாக இல்லை. கல்லூரிப் போராசிரியர் யாதொரு மாற்றமு மின்றி இதே நிலை தான் நிலவுகின்றது. தமிழ் மொழியில் வெளிவந்திருக்கும் “அமீர் ஹம்ஜா ஜங்க்” போன்ற கற்பனைக் கதைகளையே உண்மை வரலாறுகளென மதித்து மாணவர்களுக்கு அவற்றை அக்கறையோடு கூறுகின்றனர்.
Reviews
There are no reviews yet.