Description
‘இஸ்லாமிய இலக்கியக் கருவூலம்’ ஒன்றைத் தயாரிக்கும் எண்ணத்தை உண்டாக்கித்தந்து, அது இந்த அளவு செயலில் உருவாக உதவிய எல்லாம் வல்ல கருணையாளனான அல்லாஹ ஸுப்ஹானஹுவத் தஆலாவுக்கே சகல புகழும்! இஸ்லாமிய இலக்கியம் சம்பந்தமாகப் பல்வேறு தலையாய மொழிகளிலும் உள்ள எண்ணற்ற நூற்களைப் பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டுள்ளனர். அத்தகைய மாபெரும் இலக்கியம் எத்தகையது என்பதை நம்மனோருக்கு எடுத்துக்காட்ட அவாவினேன். மேலும், நமது இளைய சமுதாயத்தினர் -நாளை இந்தச் சமுதாயத்தை நடத்திச் செல்லப் போகிறவர்கள் – பல்வேறு மொழிகளிலுமுள்ள இஸ்லாமிய இலக்கியம் பற்றி அறிவதன் மூலம் தமது இலக்கியம் எத்துணை மகத்தானது, எந்த வகையிலெல்லாம் தமது சமயத்தவர் உலகில் அறிவு விளக்கை ஏற்றி வந்துள்ளனர் என்பதை உணர்ந்து தலைநிமிர்ந்து நிற்கவேண்டும், தமது சமயந்தோய்ந்த இலக்கியங்களில்.
Reviews
There are no reviews yet.