Description
தமிழ் மண்ணில் வாழும் முஸ்லீம் பெருமக்கள் சமயத்தால், மார்க்கத்தால் இஸ்லாமியர்களாக இருந்தாலும் அவர்கள் இனத்தால்,மொழியால், பண்பாட்டால், வாழும் நிலத்தால் தமிழர்களே. அவர்கள் பாகிஸ்தானில் இருந்தோ, அரபு நாடுகளில் இருந்தோ வந்தவர்கள் அல்லர். அவர்கள் அந்நியர்கள் அல்லர். அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள், மனமாற்றம் ஏற்பட்டு மதம் மாறியவர்கள். இஸ்லாம் என்ற ஒளிவிளக்கைக் கரங்களில் ஏந்தி மார்க்கம் காட்டும் வழியில் பயணம் செய்பவர்கள், இஸ்லாமியப் பெருமக்கள் தமிழின் வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டுகள் வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட வேண்டியவை. தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி. 16-ம் நூற்றாண்டிற்கும், 19-ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தை இருண்ட காலம் என்று சொல்வார்கள். நவாபுகளும், நாயகர்களும், மராத்தியர்களும் ஆட்சி செலுத்திய காலம் அது. பிற மொழி ஆதிக்கம் அப்பொழுது கொடி கட்டிப் பறந்தது.
Reviews
There are no reviews yet.