Description
இஸ்லாமியக் கலைப்பண்’பைத் தமிழில் தர்ஜுமாச் செய்து தந்த ஜனாப் ஆர்.பி.எம்.கனி, அட்வொகேட் ஏற்கெனவே தாம் ‘முஸ்லிம்’ தினசரியில் வெளியிட்டு வந்த மொழி பெயர்ப்புக்குப் பதிலாகப் பல அத்தியாயங்களை மீண்டும் மொழி பெயர்த்தார். ஆகுமான திருத்தங்களையும் செய்தார். அத்துடன் இந்நூலை அச்சுக்குக் கொடுத்து இதைப் புத்தக உருவில் ஆக்கியும் தந்தார். சென்னை இந்நூலின் ஆங்கில மூலத்தின் உரிமை வள்ளலாரின் புத்திரர் ஜனாப் எம். ஜே. ஜமால் முஹியித்தீன் சாஹிப் அவர்களைச் சேர்ந்தது. இதைத் தமிழில் புத்தக உருவில் வெளியிட அனுமதித்த அவர்களுக்கும். முஸ்லிம் தின சரியில் வெளியான இம்மொழி பெயர்ப்பை அவசியமான திருத்தங்களுடன் நூலாக வெளியாக்க அனுமதி கேட்டபோது மகிழ்ச்சியோடு அனுமதித்த ஜனாப் கே.டி.எம். அஹ்மது இப்ராஹீம் சாஹிப் பி.ஏ.,பி.எல்., அவர்களுக்கும், கடுமையான வேலை நெருக்கடிகளிடையிலும் கேட்ட உடனே விரிவான, அருமையான அணிந்துரை எழுதித்தந்த நம் தலைவர் ஜனாப் எம். முஹம்மது இஸ்மாயீல்’ சாஹிப் அவர்களுக்கும் எமது நன்றி.
Reviews
There are no reviews yet.