Description
புகழுக்கும், போற்றுதலுக்கும், உரிமையாளனாகிய கிருபையாளன் அல்லாஹ்வின் திருநாமம் கூறி ஒரு உயர்ந்த சமுதாயத்தைத் தோற்றுவிக்கும் லட்சியத் திசைகாட்டி, நிறைவான உயர்ந்த பண்புகளை தனக்கே சொந்தமாக்கிய, எம் உள்ளமெல்லாம் நிறைந்து நிற்கும் அண்ணல் நபி முஹம்மது முஸ்தபா (ஸல்) அன்னார் மீது சலவாத்தையும் சலாமையும் காணிக்கையாக்கி என்னுரையைத் தொடங்குகின்றேன். அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே! இன்றெல்லாம் நாம் படிக்கும் பத்திரிக்கைகளிலும், பார்க்கும் தொலைக்காட்சிகளிலும், கேட்கும் வானொலிச் செய்திகளிலும், பழகும் சுற்றுப்புறங்களிலும் இடையிடையே நமது உணர்வுகளைக் காயப்படுத்தும் விஷயங்கள் இல்லாமலில்லை.
Reviews
There are no reviews yet.