Description
கேரளப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பெற்ற ‘சிலப்பதிகார ஆய்வடங்கல்’ என்ற அரிய நூலில் இடம் பெற்றுள்ள இளங்கோவடிகள் சமயம் யாது? எனும் தூலின் சிறப்பைப் படித்தறிந்த பல புலவர்களும், அறிஞர்களும் இந்நூலை விரும்பி என்னிடம் நேராகவும், கடிதங்கள் வாயிலாகவும் கேட்டு வருகின்றனர்.சிறப்பாக, “தமிழகத்தில் ஜைனம்” என்ற என் நூலைப் பற்றி “Madras Mail” எழுதிய மதிப்புரையைப் படித்த புதுடில்லியில் உள்ள “The Foreign Service of The United States Of America’ என்ற அலுவலகத்தார் அமெரிக்காவிலுள்ள “Library of Congress in Washinghton” என்ற ஆய்வுத்துறைக்கு அனுப்பவேண்டி, *”தமிழகத்தில் ஜைனம்,’ ”ஊன் உணவைத் துறந்த உத்தமவேடனும் மரக்கறியின் மாண்பும்,” ‘பகுத்தறி வியக்கத்தின் பழைமை போன்ற என் நூல்கள் ஒவ்வொன்றிலும் 10 படிகள் அனுப்புமாறு எழுதிபெற்றுக் கொண்டார்கள். இப்பொழுது “இளங்கோவடிகள் சமயம் யாது’? என்ற நூலினை விரும்பிக்கேட்டுள்ளார்கள்.
Reviews
There are no reviews yet.