Description
நாடும் மொழியும், நன்னெறியும் ஒருவர்க்கு உறையுளும், உடலும், உயிரும் போல்வன. இம்மூன்றனுள் நடுநின்ற மொழிவிழியொப்பது. விழியிலார் மக்கட் பிறப்பின் பெரும் பயனைச் சிறப்புற எய்தார். அதுபோன்று தாய்மொழிப் பற்றும், அம்மொழியினை நாளும் வளம்படுத்தும் உளமிகு செல்வமும் உடையாரே தமக்கும் பிறர்க்கும் நன்னலம் புரியும் திருவுடையாராவர். அவர்களே பரந்து பட்ட இவ்வுலகினுக்குக் கலங்கரை விளக்காய் எடுத்துக் காட்டும் எழிலுடையாராவர். அவர்கள் ஆக்கியருளிய பழம்பெருஞ்செல்வமாம் நூல்களை அவர்தம் கால்வழியினர் பொன்னேபோற் போற்றியொழுகுங்கடப்பாடும்
கிழமையும் உடையராவர்.
Reviews
There are no reviews yet.