Description
இவற்றிற்கு ஒப்பாகவோ உயர்வாகவோ வேறு நூல்களைக் காட்டல் இயலாது. இவை இரண்டும் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தோன்றித் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் ஏனைய மக்களும் வியந்து பாராட்டும் சிறப்புடையனவாய்த் திகழ்கின்றன.
இவற்றுள், திருக்குறள். உலகில் இன்றுள்ள எல்லா மொழி ஆசிரியர்களும். ஒப்புயர்வற்ற கடவுள் தன்மை வாய்ந்த புலவர் எனப் பாராட்டும் திருவள்ளுவர் என்பவ ரால் இயற்றப்பெற்றது. இதன்கண் 1330 குறள் வெண் உள்ளன. ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வொரு மாணிக்கம் என்று கூறின், அது மிகையாகாது. கடவுள் வாழ்த்து என்ற ஆழமான ஆணிவேரைப் பற்றி எழுந்த பாயிரம் என்ற அடிமரத்தில், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பெருங்கிளைகள், 133 அதி காரங்களாகிய சிறுகிளைகள், 1330 குறள் வெண்பாக்களாகிய கொத்துக்கள் ஓங்கிப் படர்ந்து தழைத்து வளர்ந்துள்ள ஒரு பேராலமரம் திருக்குறள்.
Reviews
There are no reviews yet.