Description
சிலநூல் கவிதைகள் பல உள்நாட்டு வெளிநாட்டு இதழ்களில் பிரசுரமாயின, அதன் பிறகு சுமார் 20 ஆண்டு இடைவெளி! இப்போது கவிதை பற்றிய கோணமே மாறியிருக்கிறது! மரபிலேயே எழுதிப் பழகிய எனக்கு புதுக்கவிதையில் பயிற்சியே இல்லை.இருந்தும் திடீரென மறுமலர்ச்சியில் ‘இருகாட்சிகளை’ எழுதத்தொடங்கினேன். மரபும், புதுக்கவிதையும் இழைந்த ஒரு வித்தியாசமான பாணி அது! எந்த எழுத்துக்கும் வாசக அங்கீகாரமே முக்கியம். இந்தத்தொடருக்கு வாசகர்கள் தந்த வரவேற்பு அலாதியானது; அபூர்வமானது! இதைக் கவிதையாக அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். எனக்கு அதுபோதும்! சிறுகதை ஆசிரியனாக, நாவலாசிரியனாக, கட்டுரையாளனாக உங்களது வரவேற்பைப்பெற்ற நான், ஒரு கவிஞனாகவும் வரவேற்பைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் இந்த நூல்!
Reviews
There are no reviews yet.