Description
ஆய்வின் வழிகாட்டியாக இருந்து ஆற்றுப்படுத்திய எனது மதிப்பிற்குரிய ஆசிரியை திருமதி குளோரியா தேவராஜ் எம். ஏ., அவர்களுக்கும், பழைய பத்திரிகைத் தொகுதிகள் கிடைக்க உதவி புரிந்த ஆராய்ச்சியாளர் செல்வி அன்னித்தாமசு எம். ஏ., அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி உரித்தாகும்.
இந்நூலுக்கு அணித்துரை நல்கிய மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர். மு.வ. அவர்களுக்கும் தங் களைப் பற்றிய குறிப்புகளை அனுப்பி உதவிய சிறுகதை ஆசிரியர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். சிறுகதை விமர்சன நூல்கள், கிடைத்தற்கரிய பழைய பத்திரிகைத் தொகுதிகள் போன்றவை எளிதில் கிடைக்க ஆவன செய்த சென்னை மறைமலையடிகளார் நூலகத்தின் மேலாளர் திரு. இரா. முத்துக்குமாரசுவாமி M A., B. Lib., அவர்களுக்கும், தமது அரும் பெருந்தமிழ்க்கருவூலத்திலிருந்து எனது இந்த ஆராய்ச்சிக்கட்டுரைக்குத் தேவையானவற்றை ஈந்து உதவிய கோட்டையூர் திரு . ரோஜா முத்தையா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
Reviews
There are no reviews yet.