Description
அனைத்திந்தியத் தமிழ் இலக்கியக்கழகத்தின் முதல் கருத்தரங்க மாநாடு சென்ற ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த ஆண்டு இரண்டாவது கருத்தரங்க மாநாட்டினைப் பாரதியாரின் இலக்கிய வாரிசாகப் பாராட்டப்பெறும் பாரதிதாசன் பெயர் தாங்கிய பல்கலைக் கழகம், திருச்சி சமால் முகம்மது கல்லூரியில் 7,8.6.1988 ஆகிய இரு நாட்களிலும் நடத்துதற்கு முன்வந்திருத்தல் இயல்பாகவே அமைந்த ஒரு சிறப்பாகும். இப்பல்கலைக் கழகத்திற்கு இக் கழகத்தின் நன்றி உரியது.
காவிரியின் வளமும் இயற்கைக்கவினும் வரலாற்றுச் சிறப் பும் கலைப்பெருமையும் சமயப் பொதுமையும் இலக்கிய மரபும் ஒருங்கே அமைந்த திருச்சி நகரில் இக்கருத்தரங்கு நடைபெறு தல் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
Reviews
There are no reviews yet.