Description
அறவாழ்வில் நாட்டங்கொண்ட நல்லோர் தம் நெஞ்சங்களில் அவை இடம் பெற்றன. உளம் நெகிழ, கண்ணீர் மல்கிக் கசிந்துருகியவர் பலர் எழுதப்பட்ட
கவிதைகளை நூலுருவில் கொண்ருமாறு நல்லறிஞர் பலர் பலகாலும் வற்புறுத்தி வந்தனர். இலக்கியக் கண்ணோட்டத்துடன் நோக்குவார்க்கு இக்கவிதைகள் கவர்ச்சி அளிக்க தென்று காரணத்தால் இதை வெளியிட கவிஞர் பெரிதும் தயக்கம் காட்டி வந்தார்.எனினும் இக்கவிதைகள் இறைநேசத்தையும், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது கவிஞர் கொண்டுள்ள பேரன்பினையும் தூய வாழ்வில் அவர் கொண்டுள்ள அசைக்க வியலாத பற்றினையும் நன்கு பிரதிபலிக்கக் கூடிய தாய் அமைந்துள்ளன என்பது பெரியார் பலரின் முடிவாகும். மக்கள் நல நாட்டத்தையும்
தூய அன்பையும் கருவாகக்கொண்டு திகழும் இக்கவிதைகளை நூலுருவில் வெளிக்கொண்டு நல்லோர் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாக அமையும் என்ற எங்கள் கருத்தும் வலுப்பெறலாயிற்று.
Reviews
There are no reviews yet.