Description
கோடரிகள் காட்டை வெட்டி இருக்கலாம்; ஆனால் கத்திகள் பழங்களை நறுக்கித் தந்திருக்கின்றன. இவ்விரண்டில் நமக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியது கத்தியே அன்றி, கோடரி அன்று. வரலாற்றில் சில பிழைகள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் பல நன்மைகள் நங்கூரமிட்டிருக்கின்றன. அவற்றை வெளிக்கொணர்ந்து வெளிச்சமிட வேண்டும். இவ்வரிய சீரிய பணியை திரு. இதாயதுல்லா அவர்கள், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தவறவிட்டதில்லை. ஒரு வணிகராக அவர் தொழில் இருந்த போதும், மனங்களிடையே மாச்சர்யங்கள் தோன்றாமல் மதங்களிடையே பேதங்கள் தூண்டாமல் நல்லெண்ணங்களைக் கொள்முதல் செய்வதும் நட்பியலை வினியோகம் செய்வதும் பூக்களைச் செலவு செய்து புன்னகைகளை வரவாக்கிக் கொள்வதும் தமது இயல்பாக்கிக் கொண்டிருப்பவர் திரு. இதாயத்துல்லா.
Reviews
There are no reviews yet.