Description
எல்லாப் புகழும் வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே! “அரிது அரிது பெண்கள் இலக்கியம் படைப்பது அரிது. அதிலும் இஸ்லாமிய மகளிர் இலக்கியம் படைப்பது அதனினும் அரிது எனும் நிலை நிலவிவரும் சூழ்நிலையில் இச்சிறுநூலை வாசக நேயர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல ஆண்டுகளாக நம் முஸ்லிம் வாரமாத இதழ்களிலும்; குறிஞ்சி மலர் போன்று பூத்து மணம் பரப்பும் சிறப்பு மலர்கள் ஆண்டு மலர்களிலும் நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளின் கவின் தொகுப்பே இந்நூல். அவ்வப்போது நான் எழுதிவரும் கட்டுரைகளைப் படித்த வாசக நண்பர்கள், சகோதர சகோதரிகள் அவற்றைப் பாராட்டியும், புகழ்ந்தும் கடிதங்கள் எழுதியதோடு அவற்றை நூலுருவில் கொண்டு வர வேண்டும் என்றும் வேண்டினார்கள்.
Reviews
There are no reviews yet.