Description
இவ்வாறு ஒரே அம்சத்தைச் சுற்றி நாடகம் அமைவதால் அதன் அளவும் பொதுவாகச் சுருங்கவேண்டியிருக்கிறது. அதற்குள்ளே நாடகப் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனி உருவம் பெறவேண்டும்; அவர்களின் மனப்பாங்கு வெளியாக வேண்டும். ஆகையால் தான் இரங்க படம் பிடித்தாலும் அதற்கு முடிவென்பதே கிடையாது. ஆழ்ந்து முழுக முழுகப் புது உண்மைகளும் தோல்வகளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அந்த முயற்சியிலே எழுந்த ஓரங்க நடகங்களே இவை. சிக்கலான சக்தர்ப்பங்களிலே பல பாத்திரங்கள் கடந்து கொண்ட வகையை அவர்களின் தன்மைக்கேற்ப இங்கே சித்திரிக்க முயன்றிருக்கிறேன். சந்தர்ப்பங்கள் எல்லோருடைய கவனத்தையும் கவரக்கூடியவை; பாத்திரங்கள் அவற்றில் நடந்துகொண்ட விதங்களும் எல்லோருடைய கவனத்தையும் கவருமென நம்புகிறேன்.
Reviews
There are no reviews yet.