Description
பெருமானாருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உன் அன்பு மழை எப்போதும் பொழியுமாக! காலத்தையும் கட்டுப்பாட்டையும் கடந்து உன் அருட்கொடை, அவர்களைச் சூழ்ந்து நிற்போமாக! இம்மை, மறுமை ஆகிய இரண்டிற்கும் முக்கியமாகத் தேவைப்படக்கூடியது தெளிவான அறிவு.இந்த அறிவு இல்லையேல் இம்மையிலும் வெற்றி கிடைக்காது; மறுமையிலும் அதை எண்ணிப்பார்க்க முடியாது.இறைவன் மனிதனுக்குக் கொடுத்திருக்கும் அரிய கடைகளில் இறை நம்பிக்கைக்கும் இறையறிவுக்கும் இடமுண்டு.மார்க்கத்தில் நம்பிக்கையும் இறைவனைப் பற்றிய தெளிவும் ஏற்பட வேண்டுமானால், அகன்ற மனமும் குழப்பமில்லாத சிந்தனையும் இருக்க வேண்டும்.இந்த இரண்டும் இல்லையேல், முந்திய இரண்டையும் என்றைக்கும் எதிர்பார்க்க முடியாது.எனவே சிறப்புக்கும் பெருமைக்கும் உரிய இந்தக்குணங்கள் பெரிதும் பாராட்டப்படுகின்றன. இவை சம்பந்தமாகத் திருக்குர்ஆனிலும் நபிக்கருத்துக்களிலும் காணப்படும் பாராட்டுரைகள் எண்ணற்றவை.
Reviews
There are no reviews yet.