Description
1944-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், மெக்ஸிகோவின் தலைநகரான மெக்ஸிகோஸிட்டி நகரத்திற்குச் சற்றே வெளிப்புறம் ஓரிடத்தில் நான்கு அமெரிக்க இளைஞர்கள் ஒன்றுகூடினர். அவர்களுடைய நோக்கம்: அமெரிக்கா வில் ஏற்பட்டது போன்ற விவசாயப் புரட்சியை மெக் ஸிகோவிலும் ஏற்படச் செய்வது. விஞ்ஞான ஆராய்ச் சியை அடிப்படையாகக் கொண்ட முறைகள் அமெரிக்க விவசாயத்தில் எந்த அளவு பயனளித்தனவோ அதே அளவு மற்ற நாடுகளிலும் அளிக்கும் என்பது அவர்கள் துணிபு. மாஸேதுங் சொன்னதுபோல் ஏழை நாடுகளின் எதிர்காலம் அந்நாடுகளின் கிராமப்புறங்களில்தான் நிர்ணயிக்கப்படும் என்று அவர்களும் நம்பினார்கள்.
Reviews
There are no reviews yet.