Description
“அந்தமா நகரையரசாண்ட அகம்மது சாகிபு குமாரனாகிய அப்பாசு நாடகம்-இராமநாதபுரம் இரவுண்ஷாப்புக்கடை ப.வெ. முகம்மது இபுறாகீம் சாகிபு அவர்களால் நூதனமாக வியற்றியது- இஃது வீரணந்தோட்டம் கோவிந்த நாயகரால் பரிசோதிப்பித்து- திருநெல்வேலிப்பேட்டை, வங்காளம்-முகம்மது ராவுத்தர் ‘குமாரர் மகுதண ராவுத்தரவர்களால் திருவொற்றியூர் இருசப்ப முதலியார் குமாரர் பரசுராம முதலியாரது பரப்பிர்மமுத்திராக்ஷர சாலையிற் பதிப்பிக்கப்பட்து”.இவ்வாறாக 1884-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்ற அப்பாசு நாடக நூலின் முகப்புப் பக்கம் அமைந்துள்ளது. இதன் வாயிலாக 1884ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்ற அப்பாசு நாடக நூலின் முகப்புப்பக்கம் அமைந்துள்ளது, இதன் வாயிலாக 1884 ஆம் ஆண்டிற்கும் முன்னதாகவே இந்த நாடகம் இயற்றப் பெற்றிருக்கக் கூடுமென்பதை உய்த்துணரலாம்.
Reviews
There are no reviews yet.