Description
வில்லியம் உட்டின் மனம் மருத்துவப் பணியில் ஈடுபட்டது. அவர் செல்வத்தையோ செல்வாக்கையோ பெரிதெனக் கருதாமல் மக்களின் நோயைத் தீர்த்து அவர்களுடைய முகமலர்ச்சியைக்காணுதலே பேரின்பம் எனக் கருதினார். அவர் சிறந்த கல்விமான் ஆங்கிலத்தை மட்டுமல்லாமல் பிரெஞ்சு, ஜெர்மனி, போர்த்துகீசியம் ஆகிய மொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். கணக்கில் வல்லவர். தத்துவ ஞானம் படைத்தவர். தம் இல்லாள்மீது இணையற்ற அன்பு கொண்ட அவர் அவளும் அறிவில் சிறந்து விளங்க வேண்டும், தான் பெறும் இன்பத்தை அவளும் பெற வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனைகளையுடையவர். எனவே அவள் வீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பொழுது நல்ல நூல்களை உரக்கப் படித்து அவளையும் கேட்கச் செய்வார்.
Reviews
There are no reviews yet.