Description
ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினாறு. அப்போது தான் முதன் முதலாக நான் பாபுவைப் பார்த்தேன். அதன்பின் முப்பத்திரண்டு ஆண்டுகள் முதல் சந்திப்பு பறந்து சென்றுவிட்டன; ஒரு சகாப்தமே கடந்துவிட்டது. இப்போது திரும்பிப் பார்த்தால்,எத்தனையோ நினைவுகள் அலை அலையாக மன தில் தோன்றுகின்றன.
இந்தியாவின் வரலாற்றில் எவ்வளவு விந்தையான காலம் இது ! இக்காலத்தில் எத்தனையோ உயர்வுகளும் தாழ்வுகளும், வெற்றிகளும் தோல்விகளும் ஏற்பட் டுள்ளன. எனினும் இதைப்பற்றிய கதை, ஒரு வீர காவிய மாகவே திகழ்கிறது. இக்காலத்தில் வீர காவியம் நாம் வாழ்வதால், இந்தியாவின் இம் மாபெரும் நாடகத்தில் சிறிதளவோ, பெருமளவோ நாமும் பங்கெடுத்துக் கொண்டதால், நம் முடைய அற்ப வாழ்க்கைகள் கூட வீர ஒளி வீசிப் பிரகாசிக்கின்றன.
Reviews
There are no reviews yet.